​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிலி நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு

Published : Feb 11, 2019 6:45 AM

சிலி நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு

Feb 11, 2019 6:45 AM

சிலி நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. வடக்குப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அரிகா, பரினாகோட்டா ((Arica, Parinacota)) உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.