​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்கான 50 சதவீத நிதியை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் நேரில் கடிதம்

Published : Feb 10, 2019 8:21 PM

2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்கான 50 சதவீத நிதியை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் நேரில் கடிதம்

Feb 10, 2019 8:21 PM

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்கான 50 சதவீத நிதியை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் கடிதம் அளித்துள்ளார். 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கான இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ இரயில் திட்டப் பணிகளை துவங்க தமிழக அரசால் உரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக 50 கிலோ மீட்டர் மெட்ரோ இரயில் கட்டமைப்புகளை உருவாக்கிட ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனம் 20 ஆயிரத்து 196 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ இரயில் பணிகளுக்கும், முதற்கட்ட பணிகளைப் போல் மத்திய அரசு 50 சதவீத நிதி பங்களிப்பினை வழங்கிடவும், திட்டப் பணிகளை துவக்குவதற்கு உரிய அனுமதியினை துரிதமாக வழங்கிடவும் வலியுறுத்தி பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் கடிதம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.