​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பதவி விலகினால் ரூ.30 கோடி தருவதாக பாஜகவினர் பேரம், ம.ஜ.த எம்எல்ஏ சீனிவாச கவுடா குற்றச்சாட்டு

Published : Feb 10, 2019 6:13 PM



பதவி விலகினால் ரூ.30 கோடி தருவதாக பாஜகவினர் பேரம், ம.ஜ.த எம்எல்ஏ சீனிவாச கவுடா குற்றச்சாட்டு

Feb 10, 2019 6:13 PM

தான் பதவி விலகினால் 30 கோடி ரூபாய் தருவதாக பாஜகவினர் பேரம் பேசியதாக மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏ சீனிவாச கவுடா குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலம் கோலாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கு 5 கோடி ரூபாயை முன்பணமாக பாஜக தலைவர்கள் 3 பேர் தனது வீட்டுக்கு வந்து அளித்ததாக கூறினார்.

ஆனால் தான் மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்கு விசுவாசமாக இருப்பதால் பதவி விலக முடியாது என அவர்களிடம் தெரிவித்து விட்டதாக கூறினார்.

மேலும் முதலமைச்சர் குமாரசாமியை தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தை தெரிவித்ததுடன், பாஜகவினர் அளித்த 5 கோடி ரூபாயை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டதாக சீனிவாச கவுடா கூறினார்.

ஏற்கனவே எம்எல்ஏக்களை விலை பேசி ஆட்சியை கவிழ்க்க எடியூரப்பா முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.