​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Published : Feb 10, 2019 3:36 PM



டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Feb 10, 2019 3:36 PM

DMS - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திரமோடி, திருப்பூர் ஈ.எஸ்.ஐ மற்றும், திருச்சி, சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அரசு நிகழ்ச்சி மற்றும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தார். அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு பிரதமர் மோடி வந்து சேர்ந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் மோடியை வரவேற்றனர். விழா மேடையில் மோடிக்கு நடராஜர் சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

இதை அடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூரில் ESI மருத்துவமனைக் கட்டிடத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். திருச்சி, சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மோடி, சென்னை கே.கே.நகர் ESIC மருத்துவமனை கல்லூரி கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். எண்ணூர் துறைமுக புதிய பைப்லைன் திட்டத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இறுதியாக டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.