​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊதிய நிர்ணயம் செய்ய வலியுறுத்தி சின்னத்திரை துணை, இணை, உதவி இயக்குனர்கள் உண்ணாவிரத போராட்டம்

Published : Feb 10, 2019 11:05 AM

ஊதிய நிர்ணயம் செய்ய வலியுறுத்தி சின்னத்திரை துணை, இணை, உதவி இயக்குனர்கள் உண்ணாவிரத போராட்டம்

Feb 10, 2019 11:05 AM

ஊதிய நிர்ணயம் செய்யக் கோரி சின்னத்திரையில் பணியாற்றும் இணை, துணை மற்றும் உதவி இயக்குனர்கள் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு அவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் கலந்து கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டத்தை தட்டிக்கழிக்காமல் ஒரு நல்ல முடிவை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.