​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஜா புயலால் முழுவதும் சேதம் அடைந்த பைபர் படகுகள் கூடுதலாக ரூ.6.83 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு

Published : Feb 10, 2019 10:35 AM

கஜா புயலால் முழுவதும் சேதம் அடைந்த பைபர் படகுகள் கூடுதலாக ரூ.6.83 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு

Feb 10, 2019 10:35 AM

கஜா புயலால் முழுவதும் சேதம் அடைந்த பைபர் படகுகளுக்காக கூடுதலாக 6 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் ஆயிரத்து 51 பைபர் படகுகள் முழுவதும் சேதம் அடைந்ததாக கணக்கிடப்பட்டது. 5 ஆயிரத்து 662 படகுகள் சேதம் அடைந்ததாக மதிப்பிடப்பட்டு இதற்கு இழப்பீடு வழங்குவதற்காக  41 கோடியே 63 லட்சம் ரூபாய் ஆரம்ப கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், பைபர் படகுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை 85 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியது. இதற்காக கூடுதலாக 6 கோடியே 83 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.