​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனில் அம்பானி குழும பங்குகள் சரிவு

Published : Feb 10, 2019 9:10 AM

அனில் அம்பானி குழும பங்குகள் சரிவு

Feb 10, 2019 9:10 AM

அனில் அம்பானி குழும பங்குகள் ஒரே வாரத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளன.

ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் ஹேம் பைனான்ஸ் உள்ளிட்ட ரிலையன்ஸ் குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிந்துள்ளது. இதனால், 72 லட்சம் பங்குதாரர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு எல் அன் டி, எடல்வைஸ் குழுமங்கள் தான் காரணம் என ரிலையன்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் தங்கள் வசமிருந்த ரிலையன்ஸ் குழும பங்குகளை பொது சந்தையில் விற்றதே இந்த சரிவுக்கு காரணம் என ரிலையன்ஸ் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. தங்கள் வசம் அடமானமாக வைக்கப்பட்ட பங்குகளை சட்டவிதிகளுக்கு உட்பட்டு விற்பனை செய்ததாக எல் அண் டி, எடல்வைஸ் குழுமங்கள் விளக்கம் அளித்துள்ளன.