​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கலை விழாவில் பிரபல நடிகர் அமோல் பலேகருக்கு அவமதிப்பு

Published : Feb 10, 2019 7:48 AM

கலை விழாவில் பிரபல நடிகர் அமோல் பலேகருக்கு அவமதிப்பு

Feb 10, 2019 7:48 AM

சோட்டி சி பாத் , சிட் சோர் போன்ற படங்களின் புகழ் பெற்ற நடிகரும் இயக்குனருமான அமோல் பாலேகர் மும்பை நிகழ்ச்சி ஒன்றில் கலாசாரத்துறை அமைச்சகத்தை விமர்சனம் செய்ததற்காக அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனால் அவர் பேச்சை பாதியில் நிறுத்த கட்டாயப்படுத்தப்பட்டார். தேசிய நவீன கலை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமோல்பாலேகர், கலை தொடர்பான முடிவுகள் கூட கலைஞர்களிடமிருந்து பறிக்கப்பட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் போய் விட்டதாக விமர்சனம் செய்தார்.

இதனால் இவர் பேச்சை பல முறை இடைமறித்து கூச்சல் எழுப்பப்பட்டது. பேச்சை சுருக்கிக் கொள்ளுமாறும் அமோல் பாலேகர் கட்டாயப்படுத்தப்பட்டார்.