​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹாமில்டனில் இன்று நடக்கிறது மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி, இந்திய அணி தொடரை வெல்லுமா என எதிர்பார்ப்பு

Published : Feb 10, 2019 7:28 AM

ஹாமில்டனில் இன்று நடக்கிறது மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி, இந்திய அணி தொடரை வெல்லுமா என எதிர்பார்ப்பு

Feb 10, 2019 7:28 AM

மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த நியுசிலாந்து அணி, 212 ரன்கள் குவித்துள்ளது. 

20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியுசிலாந்து அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. தொடரை வெல்லப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிம் ஸீபெர்ட், காலின் மன்ரோ ஆகியோர், அட்டகாசமான தொடக்கத்தை அளித்தனர்.

இருவரும் அதிரடி காட்டியதால் நியுசிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

ஸீபெர்ட் 43 ரன்களும், காலின் மன்ரோ 72 ரன்களும் குவித்தனர். பின்னர் வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்தடுத்து வந்த வீரர்களும் தங்கள் பங்குக்கு அதிரடி காட்டவே அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்துள்ளது.

இதன் மூலம் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.