​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பந்தால் தாக்கப்பட்ட சிறுவனை சமாதானம் செய்த கிரிக்கெட் வீரர்கள்

Published : Feb 09, 2019 8:34 PM

பந்தால் தாக்கப்பட்ட சிறுவனை சமாதானம் செய்த கிரிக்கெட் வீரர்கள்

Feb 09, 2019 8:34 PM

ஆஸ்திரேலிய மைதானத்தில், பந்தால் தாக்கப்பட்ட சிறுவனை கிரிக்கெட் வீரர்கள் சமாதானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிபிஎல் கிரிக்கெட் தொடரில் நடந்த போட்டி ஒன்றில், ஜார்ஜ் பெய்லி அடித்த சிக்ஸர் ஒன்று, மைதானத்தில்  கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன்மீது விழுந்தது. இதில் பெரிய அளவிலான காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆனாலும், பந்து தாக்கியதால் அந்தச் சிறுவன் வருத்தத்தோடு  காணப்பட்டதை ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த டேனியல் சாம்ஸ் கவனித்துவிட்டார்.

இதையடுத்து அந்தச் சிறுவனை சமாதானம் செய்யும் முயற்சியாக, தான் அணிந்திருந்த தொப்பியை கழற்றி அதில் தனது கையெழுத்தை இட்டு சிறுவனுக்கு வழங்கினார். மேலும், சிக்சர் அடித்த ஜார்ஜ் பெய்லியும் அந்தச் சிறுவனுக்கு தனது கையுறைகளை பரிசாக வழங்கினார். இந்தச் சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.