​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடனை அடைப்பதற்காக சொத்துக்களை விற்க ரிலையன்ஸ் முடிவு

Published : Feb 08, 2019 9:22 PM

கடனை அடைப்பதற்காக சொத்துக்களை விற்க ரிலையன்ஸ் முடிவு

Feb 08, 2019 9:22 PM

ரிலையன்ஸ் நிறுவனம், தனது ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான, டவர்கள், ஃபைபர் கேபிள்கள் அடங்கிய குறிப்பிட்ட சொத்துக்களை விற்க முடிவெடுத்திருப்பதாகவும், இதுதொடர்பாக, கனடாவைச் சேர்ந்த புரூக்ஃபீல்டு ((Brookfield)) சொத்து மேலாண்மை நிறுவனம், பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

நாடு முழுவதும், சொந்தமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும், என இரண்டு லட்சத்து 20 ஆயிரம் செல்போன் கோபுரங்களை ரிலையன்ஸ் கையாள்கிறது. மேலும், அதிவேக இணைய இணைப்பை வழங்கும் வகையில், 3 லட்சம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட கண்ணாடியிழை கேபிள்களையும் பதித்திருக்கிறது.

ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களின் மீதான பெரும்பாலான பங்குகளை விற்க ரிலையன்ஸ் முடிவு செய்திருக்கிறது. இதன்மூலம், சுமார் 20  ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான கடன்களை அடைக்க ரிலையன்ஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.