​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவை 50 கோடி ரூபாய்க்கு விளம்பர ஒப்பந்தம் செய்த சீன நிறுவனம்

Published : Feb 08, 2019 8:12 PM

பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவை 50 கோடி ரூபாய்க்கு விளம்பர ஒப்பந்தம் செய்த சீன நிறுவனம்

Feb 08, 2019 8:12 PM

பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்துவை, சீன நிறுவனம் ஒன்று சுமார் 50 கோடி ரூபாய்க்கு விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான லி நைங், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்துவுடன் 4 ஆண்டுகளுக்கு விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளது.

சுமார் 50 கோடி ரூபாய்க்கு செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பூமா நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்த தொகைக்கு நிகரானது எனவும் கூறப்படுகிறது.