​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில், 2 நாட்கள் பறவைகளை கணக்கெடுக்கும் பணி

Published : Feb 08, 2019 6:56 AM

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில், 2 நாட்கள் பறவைகளை கணக்கெடுக்கும் பணி

Feb 08, 2019 6:56 AM

நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில், 2 நாட்கள் பறவைகளை கணக்கெடுக்கும் பணிகளை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். கூந்தன்குளம், ஆறுமுகநேரி, சிலையம், கன்னங்குளம், காடான்குளம் உள்ளடக்கிய பகுதி, பறவைகள் சரணாலயமாக விளங்குகிறது.

அங்கு ஆண்டுதோறும், கூளைக்கடா, செங்கால் நாரை, சாம்பல் நாரை, கோணமூக்கு நாரை நத்தை நாரை, பட்டைத்தலை வாத்து என பல்வேறு வகையான பறவைகள் வருவது வழக்கம்.

அதேபோல், இந்த ஆண்டும் ரஷ்யா, ஆஸ்திரேலியா, சைபீரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்துள்ளதால், அவற்றை கணக்கெடுக்கும் பணியை நேற்று வனத்துறை அதிகாரிகள் தொடங்கினர். இந்த பணி இன்றுடன் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளனர்.