​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேவலை சிறையில் அடைக்கக் கோரி போலீசில் புகார்

Published : Feb 03, 2019 7:47 PM

சேவலை சிறையில் அடைக்கக் கோரி போலீசில் புகார்

Feb 03, 2019 7:47 PM

சிறுமியை கொத்தியதால் ஏற்பட்ட பிரச்சனை காராணமாக சேவலை காவல் நிலையம் வரை அழைத்துச் சென்ற ருசிகர சம்பவம் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.

சிவ்புரியைச் சேர்ந்த பூனம் குஷ்வாஹா என்ற பெண், தனது மகளை பக்கத்து வீட்டுக்கார் வளர்க்கும் சேவல் ஒன்று அடிக்கடி கொத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து சேவல் வளர்ப்பவரை போலீசார் வரவழைத்தனர். அப்போது புகார் கொடுத்த பெண், சேவலை சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் தங்களுக்கு குழந்தை இல்லாததால் சேவலைத்தான் குழந்தையாக பாவித்து வளர்ப்பதாக அதை வளர்த்தவர் கண்ணீர் வடித்தார். இதை அடுத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனை தீர்க்கப்பட்டு, சேவலுடன் வீடு திரும்பினார்.