​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயம்... குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு...

Published : Feb 03, 2019 9:08 AM

திருப்பதி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயம்... குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு...

Feb 03, 2019 9:08 AM

திருமலை- திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன. 

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ ஸ்வாமி கோவில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி உற்சவர்களுக்கு அலங்கரிக்க பயன்படுத்தபடும் 3 தங்க கிரீடங்கள் மாயமானதாக தெரிய வந்துள்ளது. நேற்று மாலை கோவிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் மூலம் தகவல் அறிந்ததும், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர்.

பணியில் இருந்த அர்ச்சகர்கள், ஊழியர்களை கோவிலுக்கு வரவழைத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் காணாமல் போன கீரிடத்தை கண்டு பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர் அன்புராஜ் தெரிவித்துள்ளார்.