​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போட்டி தேர்வுகளில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்களை குறைக்கும் முறையை முழுமையாக அகற்ற உத்தரவு

Published : Feb 01, 2019 6:23 PM

போட்டி தேர்வுகளில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்களை குறைக்கும் முறையை முழுமையாக அகற்ற உத்தரவு

Feb 01, 2019 6:23 PM

போட்டி தேர்வுகளில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்களை குறைக்கும் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஐடி நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சிபெறாத நெல்சன் என்ற மாணவர், மறு மதிப்பீடு செய்ய கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட தவறான விடைகளுக்கு மதிப்பெண்களை குறைக்கும் முறை பின்பற்றப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்று கொண்ட நீதிபதி, மனுதாரர் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, சிபிஎஸ்சி மற்றும் பிற போட்டி தேர்வுகளில் தவறான விடைகளுக்கு மதிப்பெண்களை குறைக்கும் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.