​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு ரோபோ மூலம் பாடம் - செங்கோட்டையன்

Published : Feb 01, 2019 12:58 PM

கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு ரோபோ மூலம் பாடம் - செங்கோட்டையன்

Feb 01, 2019 12:58 PM

கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களின் திறனை வளர்க்க ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் முறையை பள்ளிகளில் கொண்டுவர பணிகள் துவங்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோபிசெட்டிபாளையம் அடுத்த நாதிபாளையத்தில் சேமிப்புக் கிடங்குடன் கூடிய நெல் வணிகவளாக அடிக்கல் நாட்டுப்பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பள்ளிக்கல்வித்துறையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ரூ.2500 கோடி மதிப்பீட்டில் 35 ஆயிரம் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது என்றும் கூறினார்.