​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது

Published : Jan 24, 2019 5:26 PM

சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது

Jan 24, 2019 5:26 PM

சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது.

ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. லாகூர் சிறையில் இருக்கும் நவாஸுக்கு இதய கோளாறு உள்ளது. செவ்வாய்க் கிழமை, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், உடனடியாக மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், புதன்கிழமை நவாஸின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது.