​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நேரடி அரசியலில் களம் இறங்கினார் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி..!

Published : Jan 23, 2019 12:54 PM

நேரடி அரசியலில் களம் இறங்கினார் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி..!

Jan 23, 2019 12:54 PM

உத்தர பிரதேச கிழக்கு பிராந்திய பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ள தனது சகோதரி பிரியங்கா காந்தி ஆற்றல் மிக்கவர் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். பிரியங்கா நியமனத்தின் மூலம் ராகுலின் தோல்வி ஒப்புக்கொள்ளப் பட்டிருப்பதாக பா.ஜ.க. விமர்சித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் வலுவான கட்சிகளாக கருதப்படும், சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரசுடன் கூட்டணியில்லை என அறிவித்து விட்டன. இதனால் அந்த மாநிலத்தில் தனித்துக் களம் காண வேண்டிய சூழலில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியை, மாநிலத்தின் கிழக்கு பிராந்திய பொதுச் செயலாளராக நியமித்துள்ளார்.

உத்தப்பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதிக்கு பொதுச் செயலாளராக ஜோதிராதித்ய சிந்தியாவும், உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதற்கும் பொதுச் செயலாளராக கே.சி.வேணுகோபாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில், தனது தாய் சோனியாவுக்காகவும், சகோதரர் ராகுலுக்காகவும் இதுவரை பிரச்சாரம் மட்டுமே மேற்கொண்டு வந்த பிரியங்கா, தற்போது முழுமையான அரசியல் களத்திற்கு வந்துள்ளார்.

 

இதனிடையே, அமேதி நாடாளுமன்ற தொகுதி மக்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, உத்திரப்பிரதேச அரசியலை மாற்ற இளம் தலைவர்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
முழுநேர அரசியலில் ஈடுபட பிரியங்கா காந்திக்கு முழு தகுதி உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா நியமனத்தின் மூலம், நாடாளுமன்ற தேர்தலில் முன்னேறி செல்வோம் என்றும், ஒருபோதும் பின்னடவை சந்திக்க மாட்டோம் என்றும் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், பிரியங்கா நியமனத்தின் மூலம், ராகுல் காந்தியின் தோல்வியை, காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதாக, உத்திரப்பிரதேச பா ஜக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா விமர்சனம் செய்திருக்கிறார். அவர்களது குடும்ப கம்பெனி எப்படி இயங்கும் என்பதை அனைவரும் அறிந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

 

பிரியங்கா நியமனம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தொடக்கத்திலிருந்தே, காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்திடமே இருப்பதால், பிரியங்காவின் நியமனம் எந்த அசாதாரண சூழலையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்திருக்கிறார்.

நேரடி அரசியலில் களம் இறங்கியுள்ள தமது சகோதரி பிரியங்கா காந்தி ஆற்றல் மிக்க தலைவர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.  தனது அமேதி நாடாளுமன்ற தொகுதி மக்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, முழுநேர அரசியலில் ஈடுபட பிரியங்கா காந்திக்கு முழு தகுதி உண்டு என்றார்.

பிரியங்கா நியமனத்தின் மூலம், நாடாளுமன்ற தேர்தலில் முன்னேறி செல்வோம் என்றும், ஒருபோது பின்னடவை சந்திக்க மாட்டோம் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார். பிரியங்கா காந்தியும், ஜோதிர்ஆதித்ய சிந்தியாவும், ஆற்றல்மிக்க தலைவர்கள் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, உத்திரப்பிரதேச அரசியலை மாற்ற இளம் தலைவர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.  

பிரியங்கா நியமனத்தின் மூலம், ராகுல் காந்தியின் தோல்வியை, காங்கிரஸ் கட்சியே அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதாக, உத்திரப்பிரதேச பாரதிய ஜனதா கட்சியின்  பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா விமர்சனம் செய்திருக்கிறார். பிரியங்கா காந்தியை அதிகாரபூர்வமாக அறிவிந்திருந்தாலும், அவர்களது குடும்ப கம்பெனி எப்படி இயங்கும் என்பதை அனைவரும் அறிந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். 

பிரியங்கா நியமனம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பிரியங்கா காந்திக்கு தமது நல் வாழ்த்துக்களை கூறுவதாக குறிப்பிட்டிருக்கிறார். தொடகத்திலிருந்தே, காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்திடமே இருப்பதால், பிரியங்காவின் நியமனம் எந்த அசாதாரண சூழலையும் ஏற்படுத்தாது என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்.