​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பு

Published : Jan 23, 2019 11:36 AM

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பு

Jan 23, 2019 11:36 AM

டெல்லி செங்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 123வது பிறந்தநாள் விழா, இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் குழந்தை பருவம் தொடங்கி, அவரது சுதந்திரப் போராட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கும் அருங்காட்சியகம் டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ளது. அதை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்து பார்வையிட்டார்.

ஆசாத் கி தீவானே என பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், சுதந்திரப் போராட்டக் காலத்தை விளக்கும் ஓவியங்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

அவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடி, நேதாஜியுடன் பணியாற்றிய சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் சந்தித்தார்.