​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நியுசிலாந்துக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி..! குல்தீப் யாதவ், சாஹல், ஷமி அசத்தல் பந்துவீச்சு

Published : Jan 23, 2019 10:24 AM

நியுசிலாந்துக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி..! குல்தீப் யாதவ், சாஹல், ஷமி அசத்தல் பந்துவீச்சு

Jan 23, 2019 10:24 AM

நியுசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

நியுசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நேப்பியர் நகரில் இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய நியுசிலாந்து அணி, தொடக்க விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. முகமது சமி, குல்தீப் யாதவ் அபார பந்துவீச்சில் அந்த அணியின் விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன.

இறுதியில் 157 ரன்களில் நியுசிலாந்து அணி சுருண்டது. கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் அரைசதம் கடந்தார்.

இதை அடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடத் தொடங்கியது. சூரியன் மறைவின் போது வெளிச்சம் அதிகமாக இருந்ததால் 30 நிமிடங்களுக்கு மேலாக போட்டி நிறுத்தப்பட்டது.

இதை அடுத்து ஒரு ஓவர் மற்றும் இரண்டு ரன்கள் குறைக்கப்பட்டு 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. 35ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்திய அணி இலக்கை எட்டியது.

ஷிகர் தவான் அதிகபட்சமாக 75 ரன்கள் குவித்து அவுட்டாகமல் இருந்தார். கேப்டன் விராட் கோலி 45 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் 1க்கு0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.