​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவல்துறை அதிகாரிகள் 6 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு

Published : Jan 19, 2019 9:18 PM

காவல்துறை அதிகாரிகள் 6 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு

Jan 19, 2019 9:18 PM

தமிழகத்தில் கூடுதல் தலைமை இயக்குனர்களாக இருக்கும் காவல்துறை அதிகாரிகள் 6 பேர், காவல்துறை தலைமை இயக்குனர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு போலீஸ் அகாடமி டிஜிபியாக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டுள்ளார். மின்வாரிய ஊழல் கண்காணிப்பு துறை டிஜிபியாக ஸ்ரீலட்சுமி பிரசாத்தும், அசுதோஷ் சுக்லா சிறைத்துறை டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்செல்வன் காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு டிஜிபியாகவும், ஆஷிஸ் பேங்கரா மருதம் அதி விரைவுப்படை செயலாக்க டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்ட மிதிலேஷ்குமார் மத்திய அரசு பணியில் தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.