​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதியில் பக்தர்களிடம் பேச்சுக் கொடுத்து பணம், நகைகளை திருடும் 9 பேர் கும்பல் கைது

Published : Jan 18, 2019 7:32 PM

திருப்பதியில் பக்தர்களிடம் பேச்சுக் கொடுத்து பணம், நகைகளை திருடும் 9 பேர் கும்பல் கைது

Jan 18, 2019 7:32 PM

திருப்பதியில் பக்தர்களை ஒரே குடும்பத்தினர் போல் நடித்து ஏமாற்றி பணம், நகைகளை திருடி வந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பதி பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த ஒன்பது பேர், போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் அவர்கள் ஒரே குடும்பத்தினர் போல் நடித்து பக்தர்களை ஏமாற்றி பணம், நகைகளை திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் கர்நாடகாவை சேர்ந்த 5 பெண்கள், 4 இளைஞர்களையும் கைது செய்த போலீசார், 12 சவரன் நகைகள், 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம், டாடா சுமோ கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.