​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவையில் 60 லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகள் வழிப்பறி

Published : Jan 18, 2019 8:17 AM



கோவையில் 60 லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகள் வழிப்பறி

Jan 18, 2019 8:17 AM

கோவையில் வாகனத்துடன் வழிப்பறி செய்யப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகள் திருப்பதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாயையும் மகனையும் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஏழாம் தேதி கோவையில் நிகழ்ந்த நகைகள் கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பைரோஜ் என்பவர் தமது நண்பர்களுடன் நகைகளைக் கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்தது.

கொள்ளையடித்த நகைகளை பைரோஜ் தமது தாய் சமா மற்றும் சகோதரர் சலிமிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. நகைகளை வீட்டில் வைத்திருக்க பயந்து தாயும் மகனும் பல்வேறு ஊர்களில் சுற்றித் திரிந்து வந்த நிலையில் திருப்பதி ரயில் நிலையம் அருகே குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து நகைகளை மீட்டனர்.