​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார் வேட்டை உற்சவம் வனத்திற்கு சென்று மானை வேட்டையாடும் விழா

Published : Jan 16, 2019 7:03 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார் வேட்டை உற்சவம் வனத்திற்கு சென்று மானை வேட்டையாடும் விழா

Jan 16, 2019 7:03 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார் வேட்டை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. புராணங்களில் உள்ள படி, ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, மலையப்ப சாமி மானை வேட்டையாடும் பார் வேட்டை உற்சவம் நடைபெறும்.

இதேபோல் புதன் கிழமை அன்று இந்த விழா நடந்தது.
இதற்காக மலையப்பசாமி தனது ஆயுதங்களுடன் பார்வேட்டை மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவர் மான் ஒன்றை வேட்டையாடுவது போன்று அர்ச்சகர்கள் மூன்று முறை ஈட்டியை வனத்தில் எய்தினர்.