​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெலுங்கானா, ஆந்திராவில் 6 விமான நிலைங்களை விரிவாக்கம் செய்ய திட்டம்

Published : Jan 13, 2019 7:21 PM

தெலுங்கானா, ஆந்திராவில் 6 விமான நிலைங்களை விரிவாக்கம் செய்ய திட்டம்

Jan 13, 2019 7:21 PM

தெலுங்கானா, ஆந்திராவில் 6 விமான நிலையங்களை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள ஐதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய சற்று பெரிய விமான நிலையங்களைத் தவிர, ராஜமுந்திரி, கடப்பா மற்றும் திருப்பதி ஆகிய விமான நிலையங்கள் மேம்படுத்தப்படுகிறது.

உடான் திட்ட விமான நிலையங்களில் கர்னூல், நெல்லூர் சேர்ந்தது போல், வாரங்கல், நிசாமாபாத், கொதகுடேமும் விரைவில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கான சர்வே நடைபெற்ற போது முடிவுகள் சாத்தியமுள்ளதாக வந்துள்ளதாகவும், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அல்லது மாநில அரசு முயற்சிகள் மேற்கொண்டால் விரைவில் அங்கு விமான நிலையங்கள் அமையும் எனவும் கள ஆய்வு மேற்கொண்ட விசாகப்பட்டின விமான நிலைய இயக்குநர் ராவ் குறிப்பிட்டுள்ளார்