​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

Published : Jan 13, 2019 7:12 AM

மக்களவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

Jan 13, 2019 7:12 AM

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறுவதையொட்டி அதற்கான ஆயத்த பணிகள் குறித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்குத் தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகள் விவரம் மற்றும் அதற்கான இடங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.