​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் பனிப் பொழிவால் மக்கள் கடும் அவதி

Published : Jan 12, 2019 6:55 PM

அமெரிக்காவில் பனிப் பொழிவால் மக்கள் கடும் அவதி

Jan 12, 2019 6:55 PM

அமெரிக்காவில் பனிப் பொழிவால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

அந்நாட்டின் பெரும் பாலான மாகாணங்களில் பனிப் பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் சாலை போக்குவரத்து பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. சாலையில் கொட்டிக் கிடக்கும் பனியால் வாகனங்களின் சக்கரங்கள் வழுக்கும் நிலை உருவாகி உள்ளது. இடைவிடாது கொட்டும் பனியால் குளிரின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில்  வீடுகளில் மக்கள் முடங்கும் நிலை உருவாகி உள்ளது. 

அவசிய தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்வோரை கொட்டும் பனி பதம் பார்த்து வருகிறது.