​​ 3 மாநிலங்களில் காங். வெற்றியால் பாஜகவினர் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது - அமித்ஷா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 மாநிலங்களில் காங். வெற்றியால் பாஜகவினர் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது - அமித்ஷா

Published : Jan 12, 2019 4:46 PM

3 மாநிலங்களில் காங். வெற்றியால் பாஜகவினர் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது - அமித்ஷா

Jan 12, 2019 4:46 PM

3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டது என்பதற்காக பாஜகவினர் நம்பிக்கை இழந்துவிடாமல், மக்களவை தேர்தலை குறிவைத்து பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றிபெற்றது என்றாலும், பாஜக தோற்கடிக்கப்படவில்லை என்றார். உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கத்தில் காங்கிரஸ் முற்றாக மறைந்துபோனதுதான் தோல்வி என்பதற்கு சரியான அர்த்தம் என்றும் அவர் விளக்கம் அளித்தார். மக்களவை தேர்தல் மிகவும் முக்கியமானது என்றும், அதில் பெரும் வெற்றி பெற்றுவிட்டால் நீண்ட காலத்திற்கு பஞ்சாயத்து தொடங்கி பாராளுமன்றம் வரை நாட்டை பாஜக ஆளும் எனவும் அமித்ஷா தெரிவித்தார்.

மக்களவை தேர்தல் நடைபெறும் நாளில், காலை 10.30 மணிக்கே தங்கள் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் வாக்களித்துவிடுவதை தொண்டர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அமித்ஷா கேட்டுக்கொண்டார்.