​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொங்கலையொட்டி திறக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையம், அடிப்படை வசதிகள் தேவை என பொதுமக்கள் கோரிக்கை

Published : Jan 12, 2019 3:56 PM

பொங்கலையொட்டி திறக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையம், அடிப்படை வசதிகள் தேவை என பொதுமக்கள் கோரிக்கை

Jan 12, 2019 3:56 PM

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்துதருமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

பண்டிகை காலங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், புதிய பேருந்து நிலையத்தில் நெரிசலைத் தவிர்க்க அதன் அருகிலேயே மாநகராட்சிக்குச் சொந்தமான காலி நிலத்தில் தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இங்கு கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் குப்பை மேடாக இருந்த இடம் சீரமைக்கப்பட்டு பேருந்து நிலையமாக மாற்றப்பட்டுள்ளதால் பேருந்துகள் வந்து செல்லும்போது கடும் புழுதி படலம் ஏற்பட்டு சுவாசப் பிரச்சனைகளை உண்டாக்குவதாகவும் அவர்கள் கூறினர்.