​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோடநாடு கொள்ளை, கொலை சம்பவங்கள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்

Published : Jan 12, 2019 3:50 PM

கோடநாடு கொள்ளை, கொலை சம்பவங்கள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்

Jan 12, 2019 3:50 PM

கோடநாடு கொள்ளை, கொலை சம்பவங்கள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கோடநாடு இல்லத்தில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொள்ளை, கொலை மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற மர்ம மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அச்சம்பவங்களின் பின்னணியில் பதவியில் இருக்கும் ஏதோ ஒரு பெரும்புள்ளிக்கு தொடர்பு உள்ளதாக அப்போதே செய்திகள் வெளிவந்ததாகவும், அது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகப் படும்படியாகவே இந்த விசாரணையின் திசையும், வழக்கின் வேகமும் நேற்றைக்கு முன்தினம் வரை இருந்துவந்தது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஏன் இந்த விசாரணையை தீவிரப்படுத்தவில்லை, ஏன் இந்த காலதாமதம்? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் வீடியோ வெளியிட்டுள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் அல்லது நீதிமன்றமே தாமாக முன்வந்து தனது முழு கட்டுப்பாட்டில் இந்த விசாரணையை  மேற்கொள்ளவேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.