​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கு மேலும் சிக்கல், விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடிக்கு, அலோக் வர்மா உதவினாரா?

Published : Jan 12, 2019 3:37 PM

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கு மேலும் சிக்கல், விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடிக்கு, அலோக் வர்மா உதவினாரா?

Jan 12, 2019 3:37 PM

வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தேடப்படும் விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடிக்கு, சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்தபோது அலோக் வர்மா உதவினாரா என்பது குறித்து மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா மத்திய அரசால் மாற்றப்பட்டார். முன்னதாக, அலோக் வர்மா மீது ராகேஷ் அஸ்தானா கூறிய 10 குற்றச்சாட்டுகளை ஆய்வுசெய்த மத்திய ஊழல் தடுப்பு ஆணையம், வர்மா விசாரிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. இதன் பிறகு அலோக் வர்மா மீது மேலும் புதிய புகார்கள் வந்திருப்பதாக மத்திய அரசுக்கு, ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அலோக் வர்மா மீதான மேலும் 6 புகார்கள் குறித்து மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் நேசனல் வங்கிக் கடன் மோசடி வழக்கு விசாரணை தொடர்பான சிபிஐ மின்னஞ்சல்கள் கசிந்ததை அலோக் வர்மா மூடி மறைக்கப் பார்த்தாரா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல, விஜய் மல்லையா மற்றும் ஏர்செல் சிவசங்கரனுக்கு எதிரான லுக்அவுட் நோட்டீஸ்களை நீர்த்துப்போகச் செய்தாரா என்பது குறித்தும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விஜய் மல்லையாவுக்கு எதிராக 2015ஆம் ஆண்டு அக்டோபரில் லுக்அவுட் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. வெளிநாடு செல்ல முயன்றால் மல்லையாவை தடுத்து வைப்பது என்றிருந்த இந்த சுற்றறிக்கையை, தகவல் தெரிவித்தால் போதும் என நீர்த்துப் போகச் செய்ததாகவும், மல்லையா வெளிநாடு செல்வதற்கு இது உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதேபோல, 600 கோடி ரூபாய் ஐடிபிஐ வங்கிக் கடன் மோசடி குற்றச்சாட்டில் சிவசங்கரனுக்கு எதிரான லுக்அவுட் சுற்றறிக்கையையும் நீர்த்துப்போகச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரங்களில் அலோக் வர்மாவை தொடர்புபடுத்தி மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அலோக் வர்மாவுக்கு எதிராக, சிபிஐ-யில் எஸ்பி பொறுப்பில் உள்ள சுதான்ஷூ காரே ((Sudhanshu Khare)) 3 குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.