​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கீர்த்தி சுரேஷை பார்க்க வந்த ரசிகர்களால் போக்குவரத்து பாதிப்பு

Published : Jan 12, 2019 3:25 PM

கீர்த்தி சுரேஷை பார்க்க வந்த ரசிகர்களால் போக்குவரத்து பாதிப்பு

Jan 12, 2019 3:25 PM

சேலம் ஆத்தூரில், தனியார் நகைகடை விழாவில் பங்கேற்ற நடிகை கீர்த்திசுரேஷை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கடும்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

image

சேலத்தில் உள்ள AVRஜூவல்லர்ஸ் நகைகடையில் புதிய வகை நகையை அறிமுகப்படுத்த கீர்த்தி சுரேஷ் ஆத்தூர் வந்திருந்தார். நகையை அறிமுகம் செய்துவிட்டு கடையின் வெளியில் அமைக்கபட்ட மேடையில் ரசிகர்கள் மத்தியில் பேசியவர், நடிகர் அஜீத்குமாருடன் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறினார்.

கீர்த்தி சுரேசை காண ரசிகர்கள் பெருமளவில் கூடியதால் சேலம்-சென்னை பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர்