​​ ஊழலற்ற ஆட்சியை பாஜக அரசு வழங்கி வருகிறது - பிரதமர் மோடி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊழலற்ற ஆட்சியை பாஜக அரசு வழங்கி வருகிறது - பிரதமர் மோடி

Published : Jan 12, 2019 3:05 PM

ஊழலற்ற ஆட்சியை பாஜக அரசு வழங்கி வருகிறது - பிரதமர் மோடி

Jan 12, 2019 3:05 PM

மகா கூட்டணி என்ற பெயரில் தோற்றுப் போன முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமன் உள்பட பலர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில் நிறைவுரை ஆற்றிய பிரதமர் மோடி,  கடந்த நாலரை ஆண்டுகால ஆட்சி பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் பணியாற்றியது என்றார். தனிநபர்களை விட கட்சி பெரியது, கட்சியை விட தேசமே பெரியது என்பதை நாலரை ஆண்டுகால ஆட்சி நிரூபித்துள்ளதாக அவர் கூறினார்.

தனிப்பெரும்பான்மையுடன் நடைபெற்ற ஒரு ஆட்சி, முதல் முறையாக ஒரு சின்ன ஊழல் புகார் கூட இல்லாமல் தேர்தலை சந்திக்க உள்ளதாக மோடி கூறினார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து பத்தாண்டு காலத்தில் ஊழல், முறைகேடுகளால் நாடு பின்தங்கி விட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

நாட்டுக்காக 18 மணி நேரம் உழைக்கும் பிரதமர் வேண்டுமா, அல்லது முக்கியமான தருணங்களில் வாய் மூடி மவுனம் சாதித்தவர்கள் வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டுமென மோடி கேட்டுக் கொண்டார். கடந்த நாலரை ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்த்துள்ளது என்று அவர் கூறினார்.

அயோத்தி வழக்கு காலதாமதம் ஆக காங்கிரசே காரணம் என்ற மோடி, தனது வழக்கறிஞர்கள் மூலம் அயோத்தி வழக்கை காங்கிரஸ் இழுத்தடிக்கிறது என்றார். நாட்டின் எந்த அமைப்பின் மீதும் காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை என அவர் சாடினார்.

குஜராத்தில் தாம் முதலமைச்சராக இருந்த போது, தமக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை எடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய மோடி, அப்போது கூட சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது என்றார். ஆனால் இப்போது, மேற்கு வங்கம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் சிபிஐ விசாரணை நடத்த தடை போட்டு உள்ளதாக அவர் கூறினார்.

மகளிர் முன்னேற்றத்திற்கு பா.ஜ.க. ஆட்சிக்கு பாடு பட்டதாக கூறிய மோடி, 10 சதவிகித இட ஒதுக்கீடு சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை அகற்ற உதவும் என்றார்.