​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

Published : Jan 12, 2019 2:26 PM

தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

Jan 12, 2019 2:26 PM

தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் தென் கடலோர தமிழக பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்த மையம் கூறியுள்ளது. நீலகிரி, அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் அடுத்த 2 இரவுகளுக்கு  உறை பனி தொடரும் என குறிப்பிட்டுள்ளது. குறைந்தபட்சமாக உதகையில் 4.8 டிகிரி செல்சியஸ்-ம், கொடைக்கானலில் 9.1 டிகிரி செல்சியஸ்-ம்,வால்பாறையில் 5.5 டிகிரி செல்சியஸ்-ம் வெப்பம் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மழை எங்கும் பதிவாகவில்லை எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்றும் கூறியுள்ளது.