​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளில் இரண்டே நாட்களில் சுமார் 3 லட்சம் பேர் பயணம்

Published : Jan 12, 2019 11:44 AM

பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளில் இரண்டே நாட்களில் சுமார் 3 லட்சம் பேர் பயணம்

Jan 12, 2019 11:44 AM

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து இருநாட்களில் சுமார் 3 லட்சம் பேர் அரசு பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். 

பொங்கல் பண்டிகைக்கு கொண்டாட வசதியாக 14-ந் தேதி அரசு விடுமுறை அளித்துள்ளதால் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை முதல் பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்காக வழக்கமான பேருந்துகள் தவிர கூடுதலாக 748 பேருந்துகள் என மொத்தம் 3,100 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதில் 1,45,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர். சனிக்கிழமை அன்று 3741 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 1,54,000 பேர் பயணித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பொங்கலை கொண்டாட செல்வோருக்காக சிறப்பு பேருந்துகள் 14-ந் தேதி வரை இயக்கப்படுகின்றன.