​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை விமான நிலையத்தில் 24 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Published : Jan 12, 2019 10:08 AM



சென்னை விமான நிலையத்தில் 24 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Jan 12, 2019 10:08 AM

சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை, 2 பெண் பயணிகளிடம் வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஹாங்காங்கில் இருந்து Cathay Pacific விமானம் மூலம் சென்னை வந்த கொரியப் பெண்கள் 2 பேர், சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை கண்காணித்த வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள், இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவர்களை பெண் அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஸ்கர்ட் போன்ற உள்ளாடையில் தலா ஒரு கிலோ எடை கொண்ட 24 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட 24 கிலோ தங்கத்தின் மதிப்பு 8 கோடி ரூபாய் எனக் கூறியுள்ளனர்.

மேலும், தங்கத்தை கடத்தி வந்த கொரியாவைச் சேர்ந்த ஹேன்பியோல் ஜுங் ((Hanbyoul jung)) மற்றும் ஏன்யங் கிம் ((Eunyoung kim)) ஆகியோரைப் பிடித்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.