​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி திணறல்

Published : Jan 12, 2019 10:04 AM

முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி திணறல்

Jan 12, 2019 10:04 AM

சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிபெற 289 ரன்னை, ஆஸ்திரேலிய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அலெக்ஸ் கேரியும், ஆரோன் ஃபின்ஜும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ஆரோன் பிஞ்ச் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய கவாஜா, மார்ஸ், ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் நிதானமாக விளையாடி, ரன்களை சேர்த்தனர். 50 ஓவர்கள் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹேண்ட்ஸ்காம்ப் 73 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில், புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்திய நிலையில், 289 ரன்னை இலக்காக கொண்டு, இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்து வருகின்றனர்.