​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொடநாடு கொள்ளை, சர்ச்சைக்குரிய வீடியோ வெளியீடு - அமைச்சர் ஜெயக்குமார்

Published : Jan 12, 2019 6:51 AM

கொடநாடு கொள்ளை, சர்ச்சைக்குரிய வீடியோ வெளியீடு - அமைச்சர் ஜெயக்குமார்

Jan 12, 2019 6:51 AM

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த, கொலை கொள்ளை குறித்து தெகல்தா இதழின் முன்னாள் ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ,  திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சதி என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பின், கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரம் மாத இறுதியில் கொலை-கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

இதுதொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் பேட்டியுடன், சர்ச்சைக்குரிய வீடியோ  ஒன்றை, பிரபல செய்தி இதழான தெஹல்காவின், முன்னாள் நிர்வாக ஆசிரியரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான, மேத்யூ சாமுவேல், டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். 

இந்த சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் மரணத்தில் மட்டும் மர்மம் இல்லை, மரணத்தைத் தொடர்ந்து பல்வேறு மர்மமான நிகழ்வுகள் நடந்துள்ளன என்பது வெட்ட வெளிச்சம் ஆகி இருப்பதாக கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலாவும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் எப்படி சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கிறார்களோ அதைப் போல, தற்போது ஆளும் தரப்பு மீதும் சந்தேகக் கணைகள் பாய்ந்துள்ளதாக கூறியிருக்கிறார். 

இந்த மர்மத்தை உடைத்து உண்மைகளை நாட்டுக்குச் சொல்ல வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருப்பதாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்....


இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில், சென்னை பட்டின்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு, திட்டமிட்ட சதி அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.