​​ பத்திரப்பதிவுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் - சார்பதிவாளர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பத்திரப்பதிவுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் - சார்பதிவாளர் கைது

Published : Jan 12, 2019 6:37 AM

பத்திரப்பதிவுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் - சார்பதிவாளர் கைது

Jan 12, 2019 6:37 AM

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் பொன்பாண்டியன், பத்திரப்பதிவுக்காக லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், பத்திரப்பதிவுக்காக பொன்பாண்டியனை அணுகியுள்ளார். அவரிடம் பொன்பாண்டியன் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கில் வராத 14 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலை அடுத்து 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு 2 மணி நேரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.