​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்துகள், ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Published : Jan 11, 2019 8:49 PM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்துகள், ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Jan 11, 2019 8:49 PM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்துகள், ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

சனி, ஞாயிறு உட்பட தொடர் விடுமுறையை அடுத்து வெள்ளிக்கிழமை முதல் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் தொடர்பான காவல்துறை மற்றும் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் நடைபெற்றது.

இதனிடையே அரசுத் தரப்பிலேயே ஏ.சி. மற்றும் ஸ்லீப்பர் பேருந்துகள் விடப்படுவதாலும் கட்டணம் குறைவாக இருப்பதாலும், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை என தனியார் பேருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. சுவிதா ரயில்கள் உட்பட 33 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மார்க்கங்களில் செல்லும் ரயில்களில் பயணிகள் நெரிசல் அதிகரித்துக் காணப்படுகிறது.