​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது - மு.க.ஸ்டாலின்

Published : Jan 11, 2019 8:44 PM

தமிழக அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது - மு.க.ஸ்டாலின்

Jan 11, 2019 8:44 PM

தமிழ்நாட்டின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தனது கிராமசபை கூட்டத்தை கண்டு, சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். 

திமுக சார்பில் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாம் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, இள்ளாலூர் கிராமத்தில் நடைபெற்றது. மங்கிய மாலைப் பொழுதில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களின் உற்சாக வரவேற்புக்கு இடையே பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டதாகத் தெரிவித்தவர், முதலமைச்சரின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்தார்.

நாட்டை ஆள்பவர்கள், தமிழ்நாட்டில் உள்ள மைனாரிட்டி அரசுக்கு முட்டுக்கொடுத்து காப்பாற்றிக்கொண்டிருப்பதாகவும், மு.க.ஸ்டாலின், எடுத்துரைத்தார்

இதனைத் தொடர்ந்து, இள்ளாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் எழுப்பிய கோரிக்கைகளை, கவனமுடன் கேட்ட மு.க.ஸ்டாலின், இவற்றை நிறைவேற்றவே, ஆட்சி மாற்றமும், ஊராட்சி தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என திமுக வலியுறுத்துவதாக தெரிவித்தார். அப்போது, 10ஆம் வகுப்பு பயிலும், அரசுப் பள்ளி மாணவி, தனக்காக இன்றி, தனது சக ஏழை மாணவிகளுக்காக வைத்த கோரிக்கை அனைவரையும் கவனிக்க வைத்தது.

வீட்டிற்குத் தேவையான காய்கறிகள், உணவு பொருட்கள், அணிவதற்கு தேவையான உடைகள் ஆகியவற்றை கவனித்து, கவனித்து வாங்கும் நாம், ஆட்சியாளர்களையும் அதுபோல் தேர்ந்தெடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.