​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேற்கூரை பெயர்ந்து விழுந்த அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த பள்ளிக் குழந்தைகள்

Published : Jan 11, 2019 7:02 PM

மேற்கூரை பெயர்ந்து விழுந்த அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த பள்ளிக் குழந்தைகள்

Jan 11, 2019 7:02 PM

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த நிலையில் வகுப்பில் இருந்த குழந்தைகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

நந்திமங்கலத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 31 குழந்தைகள் பயின்று வருகின்றனர். காலை வழக்கம்போல் பள்ளி தொடங்கிய சில மணி நேரத்தில் கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து காங்கிரீட் பூச்சு மற்றும் செங்கற்கள் பெயர்ந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.

நல்வாய்ப்பாக குழந்தைகள் யாரும் வகுப்பறையில் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் இடையில் 4 முறைகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இறுதியாக கடந்த 2012ஆம் ஆண்டில் ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டும் கிராம மக்கள், உடனடியாக புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.