​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எண்ணூர் சதுப்புநிலத்தில் நிலக்கரி சாம்பல் கொட்டுவதற்கு வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

Published : Jan 11, 2019 6:48 PM

எண்ணூர் சதுப்புநிலத்தில் நிலக்கரி சாம்பல் கொட்டுவதற்கு வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

Jan 11, 2019 6:48 PM

சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டக் கூடாது என, வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதுதொடர்பாக, சென்னை எண்ணூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், எண்ணூர் சதுப்பு நில பகுதியில் நிலக்கரி சாம்பலை கொட்டுவதற்கு வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு கடந்த நவம்பர் மாதம் தடை விதித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து வல்லூர் அனல் மின் நிலையம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாரயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இதுபற்றி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், அனல் மின்நிலையம் விதிகளை மீறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய பதிலளிக்க வல்லூர் அனல்மின் நிலையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தடையை நீட்டித்து ஆணையிட்டனர்.