​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்

Published : Jan 11, 2019 6:48 PM

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்

Jan 11, 2019 6:48 PM

சென்னை ராயபுரத்தில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ள போலீசார் ஒருவரை தேடி வருகின்றனர்.

ராயபுரம் பி.ஏ.என் ராஜரத்தினம் 6வது தெருவில் குடோன் வாடகைக்கு எடுக்கப்பட்டு சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மூன்று டன் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் குமரேசன் என்பவரை தேடி வருகின்றனர்.