​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிரீஸ் பல்கலைக்கழகங்களுக்கு இந்தியாவில் இருந்து மர்ம கடிதம், ரசாயனம் தோய்த்த கடித உரையால் ஊழியர்களுக்கு சுவாசக் கோளாறு

Published : Jan 11, 2019 6:38 PM

கிரீஸ் பல்கலைக்கழகங்களுக்கு இந்தியாவில் இருந்து மர்ம கடிதம், ரசாயனம் தோய்த்த கடித உரையால் ஊழியர்களுக்கு சுவாசக் கோளாறு

Jan 11, 2019 6:38 PM

இந்தியாவில் இருந்து கிரீஸ் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அலர்ஜி ஏற்படுத்தும் மர்மப் பொருளால் ஆன மை பயன்படுத்தப்பட்டிருப்பதால் தீவிரவாதிகளின் செயலாக இருக்கக் கூடும் என விசாரணை நடைபெறுகிறது.

இந்தியாவில் இருந்து கிரீஸ்-ல் உள்ள 12 பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் ஒன்று சென்றுள்ளது. அவற்றில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தத்தக்க அலர்ஜி ஏற்படுத்தும் மர்ம ரசாயனம் கலந்த மையை பயன்படுத்தி, மதம் சார்ந்த வார்த்தைகள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

அதன் மேல் உரையிலும் அதே போன்ற மர்ம ரசாயனம் தோய்க்கப்பட்டிருப்பதால், அதனை தொட்ட பல ஊழியர்கள் சுவாசக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அதே வேளையில், தீவிரவாதத் தடுப்புப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல இடங்களுக்குச் செல்லவிருந்த, அதே போன்ற கடிதங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.