​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவன செயற்கை இடுப்பு மூட்டு பொருத்தி பாதிப்பு

Published : Jan 11, 2019 6:32 PM

ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவன செயற்கை இடுப்பு மூட்டு பொருத்தி பாதிப்பு

Jan 11, 2019 6:32 PM

ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவன செயற்கை இடுப்பு மூட்டு பொருத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 1 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை ஏற்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் பக்க விளைவுகள் கொண்டது என தடை செய்யப்பட்ட பின்பும், ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவன செயற்கை இடுப்பு மூட்டு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் உடலில் பொருத்தப்பட்டது.

இதனால் தமது தாய் உயிரிழந்ததாகக் கூறி வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் 3 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பீட்டை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதை ஏற்ற உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சென்றடையும் வகையில் இத்திட்டத்தை விளம்பரப்படுத்துமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.