​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Published : Jan 11, 2019 6:32 PM

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Jan 11, 2019 6:32 PM

சாரதா சீட்டு நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சாரதா சீட்டு நிறுவனம் மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 17இலட்சம் பேரிடம் சீட்டு நிதியாக முப்பதாயிரம் கோடி ரூபாய் வரை திரட்டியது. இந்தப் பணத்தைப் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ததுடன் சீட்டுக் கட்டியவர்களுக்குப் பணத்தைத் திருப்பி வழங்கவில்லை. இது தொடர்பாக சாரதா குழுமத் தலைவர் சுதீப்தோ சென், இயக்குநர் தேப்ஜானி முகர்ஜி, குணால் கோஷ் உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து 2014 மேமாதத்தில் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்பட்டன.

இந்த வழக்கில் சாரதா நிறுவனத்துக்கு வழக்கறிஞராக ஆஜரான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி ஒன்றேகால் கோடி ரூபாயைக் கட்டணமாகப் பெற்றதாகவும், 2010-2012காலக்கட்டத்தில் பல்வேறு விசாரணைகளைச் சமாளிக்க ஒரு கோடியே நாற்பது இலட்ச ரூபாயை லஞ்சமாகப் பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கொல்கத்தாவின் பாராசத் நீதிமன்றத்தில் நளினி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சுதீப்தோ சென்னுடன் சேர்ந்து குற்றச் சதி செய்ததாகவும் நளினி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.