​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்ப உணவானது பிரெஞ்சு ஆம்லெட்

Published : Jan 11, 2019 5:37 PM

சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்ப உணவானது பிரெஞ்சு ஆம்லெட்

Jan 11, 2019 5:37 PM

புதுச்சேரியில் பிரெஞ்சு ஆம்லெட் உணவு சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான உணவாக மாறியுள்ளது.

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டாலும், அவர்களின் சில வகையான உணவுகள் இன்றும் புதுச்சேரியில் பிரபலமாக உள்ளது. சாலட் நிக்கோஸ் ((Salad Nicoise)),  படே டி ஃபோயே கிரஸ் ((Pate De Foie Gras)) க்ரெம் கேரமல் (( Crème caramel )), பிரெஞ்சு ஃப்ரைஸ் ஃபிங்கர் (( French fries finger)) ஆகிய பிரெஞ்சு நாட்டு உணவுகளை பலரும் விரும்பி ருசி பார்த்து வருகின்றனர். இவற்றுடன் தூமாஸ் வீதியில் உள்ள லே சவோர் பிரஞ்சு உணவு விடுதியில் கிடைக்கும் ஃபிரெஞ்சு ஆம்லெட் பாரம்பரியம் மாறாமல் சமைக்கப்படுவதால் பலரும் அதை விரும்பி சாப்பிடுவதாக சமையல் கலைஞர் மணி தெரிவித்துள்ளார்.

மஞ்சள் கருவை வேக வைத்து, வெள்ளைக் கருவை கலக்கி நுரையுடன் பரிமாறுவது, ஆம்லெட்டில் பாலாடை, காளாண், வெண்ணை, குடை மிளகாய் வைத்து சமைப்பது என பல வகையான ஆம்லெட்டை ருசித்து மகிழ்கின்றனர்.