​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு செல்லும் பிரமாண்ட விஷ்ணு சிலை, சிலையைக் கொண்டு செல்ல தடை விதிக்கக் கோரி முறையீடு

Published : Jan 11, 2019 5:33 PM

திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு செல்லும் பிரமாண்ட விஷ்ணு சிலை, சிலையைக் கொண்டு செல்ல தடை விதிக்கக் கோரி முறையீடு

Jan 11, 2019 5:33 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பிரம்மாண்ட விஷ்ணு சிலையை பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டையில் இருந்து 350 டன் எடையுள்ள ஒரே கல்லால் ஆன விஷ்ணு சிலை கொண்டு செல்லப்படுவதாக முறையீடுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிலை செல்லும் வழியில் சாலைகள், குடியிருப்புகள், கட்டிடங்கள் சேதமடைவதாகவும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்கவும் கோரப்பட்டது. செய்தித்தாள் செய்தியின் அடிப்படையில் வழக்கை ஏற்க முடியாது என்ற நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் பட்டியலிடப்பட்டு  விசாரணைக்கு ஏற்கப்படும் என்று தெரிவித்தனர்.